
வாரிய இயக்குனர்கள்
ஒரு சரிநிகர பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதித்துவத்துடன், ஒன்பது வாரிய இயக்குனர்களினால் PIDM தற்போது நிர்வகிக்கப்படுகிறது. PIDM-மின் வாணிபம் மற்றும் விவகாரங்களை மேற்கொள்வதற்கு வாரியமே பொறுப்பாகும். PIDM-மின் விரிவுப்படுத்தப்பட்டிருக்கும் அதிகாரத்திற்கு ஏற்ப, ஒன்பது உறுப்பினர்கள் வரை கொண்டிருக்க வாரியத்திற்கு PIDM சட்டம் அனுமதி அளிக்கிறது.
அதிகாரி அல்லாத வாரியத் தலைவர் வாரியத்துக்குத் தலைமைத் தாங்குகிறார். அதில் இரண்டு பதவி சார்ந்திராத உறுப்பினர்கள் அதாவது பேங்க் நெகாரா மலேசியா கவர்னர் மற்றும் கருவூலத்தின் தலைமைச் செயலாளர், பொதுச்சேவைத் துறையலிருந்து நியமிக்கப்பட்ட ஒரு இயக்குனர் மற்றும் பொருத்தமான வங்கி மற்றும் நிதித் துறை அனுபவம் கொண்ட ஒருவருடன் சேர்த்து பொருத்தமான தனியார் துறைகளைச் சேர்ந்த மூன்று இயக்குனர்கள் உட்பட இதர பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்கின்றனர். தலைவர் மற்றும் பதவி சார்ந்திராத அனைத்து உறுப்பினர்களும் நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.