பட்டியல் > PIDM பற்றி >  நிறுவன நிர்வாகக் குழு > தலைமை நடவடிக்கை அதிகாரி

நிறுவன நிர்வாகக் குழு
 
முஹமட் கைருடின் ஹஜி அர்ஷாட்
தலைமை நடவடிக்கை அதிகாரி
முஹமட் கைருடின் பின் ஹஜி அர்ஷாட், PIDM-மின் தலைமை நடவடிக்கை அதிகாரியாக பொறுப்பை வகிக்கிறார். PIDM-மில் காப்புறுதி, இடர் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு, தலையிடுதல் மற்றும் தோல்வித் தீர்வு, நிதி மற்றும் நிர்வாகம், சட்டம், தொடர்பு மற்றும் பொது உறவுகள் மற்றும் வியூகத் திட்டமிடல் உட்பட முக்கிய நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொறுப்பை இவர் கொண்டிக்கிறார். இந்தப் பதவியை வகிப்பதற்கு முன்னர் காப்புறுதி, இடர் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு பிரிவின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி இருந்தார், பிரச்னைக்குரிய வங்கிகளின் தோல்விக்குத் தீர்வு காணுதல் மற்றும் தலையீடுதல் உட்பட PIDM வங்கிகளின் இடர் அளவில் ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கு இவர் பொறுப்பானவர். வங்கி விதிமுறைப் பிரிவு மற்றும் இஸ்லாமிய வங்கி மற்றும் தக்கா•புல் பிரிவில் 15 ஆண்டுகளுக்கும் மேல் BNM-மில் கைருடின் பணியாற்றி இருக்கிறார். இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் துறையில் பரந்த அனுபவம் கொண்டுள்ள இவர் தற்போது இஸ்லாமிய வைப்புத்தொகை காப்புறுதி மீதான அனைத்துலக வைப்புத்தொகை காப்புறுதியாளர் (IADI) சங்கக் குழுவின் தலைவர் பதவி உட்பட இஸ்லாமிய நிதிப் பரிமாற்றம் மீதான மலேசிய கணக்குத் தர வாரிய (MASB) பணிக் குழுவின் ஓர் உறுப்பினராக இருக்கிறார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் ஆய்வறிக்கைகளை சமர்ப்பதோடு தங்களின் இஸ்லாமிய வங்கித் தொழில்துறையை மேம்படுத்துவதில் பல்வேறு நாடுகளுக்கு இவர் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி இருக்கிறார். மலேசியா, அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் இருந்து கணக்குத் துறையில் இவர் பட்டம் பெற்றுள்ளார்.


     



Name :  
 
Message :  
Send to friend
உங்களின் தகவல் (இங்கே கிளிக் செய்யுங்கள்):
மேலும் இந்த பகுதியிள் :

ஜீன் பியர் சபோரின்

முஹமட் கைருடின் ஹஜி அர்ஷாட்

வான் அஹ்மாட் இக்ராம் வான் அஹ்மாட் லோத்•பி

லிம் யாம் போ

லாய் வை கீன்

சி. லோகநாதன்

சித்தி சுபைடா ஹரோன்

நோரிடா பஹாருடின்

லீ இ மிங்

ர•பிஸ் அசுவான் அப்துல்லா

லிம் கொங் குவான்

சுவா இ லீன்


சிறப்புச் செய்திகள் :

நிறுவன அமைப்புமுறை
   
வழிகாட்டிகள், கொள்கைகள் & ஆலோசனை அறிக்கைகள்
   

அடையாளக்குறி :

Digg del.icio.us Facebook Mixx Google Furl StumbleUpon Wikio YahooMyWeb