 |
நிதியளிப்பு |
வைப்புத்தொகை காப்புறுதி நிதி நிர்வாகம்
வைப்புத்தொகை காப்புறுதி நிதி நிர்வாகம்
வைப்புத்தொகை காப்புறுதி முறை வழக்கமான மற்றும் இஸ்லாமிய வைப்புத்தொகைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வேளையில், PIDM இந்த இரண்டு நிதிகளையும் தொடர்ந்து தன் வசம் வைத்துக் கொண்டு நிர்வகித்து வருகிறது.
வழக்கமான வைப்புத்தொகை காப்புறுதி நிதி
* வழக்கமான வைப்புத்தொகை ரீதியில் ஏற்படும் அனைத்து செலவுகள் உட்பட PIDM-மினால்
பெறப்படும் அனைத்து கட்டணங்கள் மற்றும்/அல்லது இதர பணம் மற்றும் PIDM-மின்
பெறப்படும் அல்லது வைக்கப்படும் சொத்துக்கள்; மற்றும்
இஸ்லாமிய வைப்புத்தொகை காப்புறுதி நிதி
* இஸ்லாமிய வைப்புத்தொகை ரீதியில் ஏற்படும் அனைத்து செலவுகள் உட்பட PIDM-மினால்
பெறப்படும் அனைத்து கட்டணங்கள் மற்றும்/அல்லது இதர பணம் மற்றும் PIDM-மின் முதலீடு
செய்யப்பட்ட அல்லது பெறப்படும் சொத்துக்கள்.
ஒரு வங்கி தோல்வியுறும் பட்சத்தில் வைப்புத்தொகையாளர்களுக்கு பணம் வழங்கவும் நடவடிக்கைச் செலவினங்களைக் கவனிக்கவும் நிதிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வேளையில் PIDM-மிற்கு ஒரு நியாயமான லாபம் கிடைக்கும் பொருட்டு PIDM இந்த நிதிகளை நிர்வகிக்கும் என்பதோடு மிக எச்சரிக்கையாக முதலீடு செய்யும். ஷரியா கோட்பாடுகளுக்கு ஏற்ப பொருத்தமான வழிகாட்டுதல்களுக்கிணங்க இஸ்லாமிய வைப்புத்தொகை காப்புறுதி நிதி நிர்வகிக்கப்படுகிறது.
இந்த காரணத்துக்காக, PIDM தற்போது அரசாங்கம் அல்லது பேங்க் நெகாரா மலேசியாவினால் (BNM) உத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள அல்லது வெளியிடப்பட்டுள்ள ரிங்கிட் ஆதிக்கத்திலான பங்குகள் போன்ற பாதுகாப்பான மற்றும் புழங்கக் கூடிய பங்குகளில் தனது நிதிகளை முதலீடு செய்து வருகிறது.