PIDM-மைப் பற்றி
மலேசிய வைப்புத்தொகை காப்புறுதிக் கழகமானது (PIDM) மலேசிய வைப்புத்தொகை காப்புறுதிக் கழகச் சட்டத்தின் (PIDM சட்டம்) கீழ் உறுவாக்கப்பட்டிருக்கும் ஓர் அரசாங்க சார்பு நிறுவனமாகும். PIDM கீழான எங்களின் முக்கியப் பணியானது, ஓர் உறுப்புக் கழகம் தோல்வியுறும் பட்சத்தில் தக்கா•புல் சான்றிதழ்கள் மற்றும் காப்புறுதி பாலிசிகளின் உரிமையாளர்களைப் பாதுகாக்கும் தக்கா•புல் மற்றும் காப்புறுதி அனுகூலங்கள் முறை உட்பட வைப்புத்தொகையின் ஒரு பகுதி அல்லது மொத்த இழப்புக்கு பாதுகாப்பு வழங்க வைப்புத்தொகை காப்புறுதி செவையை வழங்குவதும் நிர்வகிப்பதும் ஆகும். தேசிய நிதிப் பாதுகாப்பு வலையத்தின் ஒரு முழுமையான அங்கம் எனும் முறையில், நிதி முறையின் நிலைத்தன்மைக்குப் பங்களிக்கவும் ஊக்குவிக்கவும், நிதி முறையில் சிறந்த இடர் நிர்வாகத்திற்கு உந்துதல் சக்தியை வழங்கவும், பிரச்னைக்குரிய உறுப்புக் கழகங்களில் தலையிட்டு தீர்வு காணவும் மற்றும் வைப்புத்தொகையாளர்கள் மற்றும் பாலிசி உரிமையாளர்களின் சிறந்த நலன்களுக்காக நடவடிக்கையில் ஈடுபடவும் நாங்கள் பரந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றோம்.
PIDM, நிதி அமைச்சின் கீழ் நாடாளுமன்றத்துக்குப் பதில்கூறக் கடமைப்பட்டிருக்கிறது. நாங்கள், குறிப்பாக அனைத்துலக நிலைக்குட்பட்ட மலேசிய வைப்புத்தொகை காப்புறுதிக் கழகமாகவும் (MDIC) விளங்குகிறோம்.
PIDM எத்தகைய பாதுகாப்பை வழங்குகிறது?
|
வைப்புத்தொகை காப்புறுதி முறை
|
தக்கா•புல் மற்றும் காப்புறுதி அனுகூலங்கள் பாதுகாப்பு முறை (TIPS)
|
|
ஓர் உறுப்பு வங்கி தோல்வியுறும் பட்சத்தில், உறுப்பு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் வைப்புத்தொகையாளர்களின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்புத்தொகைகளுக்கு இழப்பு ஏற்பட்டால் அவர்களைப் பாதுகாக்கும்.
|
ஓர் உறுப்பு காப்புறுதி நிறுவனம் தோல்வியுறும் பட்சத்தில், தக்கா•புல் பங்கேற்பாளர்கள் மற்றும் காப்புறுதி பாலிசி உரிமையாளர்களின் தகுதிபெற்ற தக்கா•புல் மற்றும் காப்புறுதி அனுகூலங்களுக்கு இழப்பு ஏற்படுவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும்.
|
எங்களின் அதிகாரம்
PIDM-மின் அதிகாரம் PIDM சட்டத்தில் வகுக்கப்பட்டிருக்கிறது மற்றும் அதன் இலக்குகளானவை:
a) ஒரு வைப்புத்தொகை காப்புறுதி முறை மற்றும் ஒரு தக்கா•புல் மற்றும் காப்புறுதி
அனுகூலங்கள் பாதுகாப்பு முறையை நிர்வகிப்பது;
b) வைப்புத்தொகையைப் பெறும் ஓர் உறுப்பினர் பணத்தைச் செலுத்தும் கடப்பாட்டைக் கொண்டிருப்பதால் வைப்புத்தொகையின் ஒரு பகுதி அல்லது மொத்த இழப்புக்கு காப்புறுதி வழங்குவது மற்றும் ஓர் உறுப்புக் காப்புறுதியாளர் பணத்தைச் செலுத்தும் கடப்பாட்டைக் கொண்டிருப்பதால் தக்கா•புல் அல்லது காப்புறுதி அனுகுலங்களின் ஒரு பகுதி அல்லது மொத்த இழப்புக்கு பாதுகாப்பு வழங்குவது;
c) நிதி முறையில் சிறந்த இடர் நிர்வாகத்திற்கு ஊக்குவிப்புகளை வழங்குவது; மற்றும்
d) நிதி முறையின் நிலைத்தன்மைக்கு பங்களிப்பது அல்லது ஊக்குவிப்பது.
பத்தி (a) மற்றும் (d)-யின் கீழ் தனது இலக்குகளை அடைய, நிதி முறைக்கான செலவுகளைக் குறைக்க கழகம் இத்தகைய முறையில் நடவடிக்கையில் செயல்படும்.
எங்களின் நோக்கம்
• ஒரு மிகச் சிறந்த செயல்பூர்வ காப்புறுதியாளர்
எங்களின் திட்டம்
நாங்கள்:
• இஸ்லாமிய மற்றும் வழக்கமான வைப்புத்தொகைகளைப் பாதுகாக்கின்றோம்
• தக்கா•புல் மற்றும் காப்புறுதி அனுகூலங்களைப் பாதுகாக்கின்றோம்
• எங்கள் பங்குதாரர்கள் மற்றும் எங்கள் ஊழியர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, ஓர் ஆற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் எங்களின் அதிகாரத்தை நாங்கள் நிறைவேற்றுகின்றோம்.
எங்களின் வியூக ஊகங்கள்
• சிறந்த நடவடிக்கை
• சிறந்த நிர்வாகம்
• நிதி முறையில் பொதுமக்களின் நம்பிக்கை
எங்களின் நிறுவன இலக்குகள்
• முறையாக போதிக்கப்பட்ட மற்றும் தகவல் தெரிவிக்கப்பட்ட பங்குதாரர்கள்
• செயலூக்கமுடைய பங்காளித்துவம்
• சிறப்பாக ஆட்சிப் புரியப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும் கழகம்
• வலிமையான இடர் மதிப்பீடு, கண்காணிப்பு மற்றும் தீர்வு ஆற்றல்
• சிறந்த வாணிபம் மற்றும் நிதிச் செயல்பாடுகள்
• போட்டியிடும் ஆற்றலும் அறிவுசார்ந்த மனிதவளமும்
• சாதகமான நிறுவனச் சூழ்நிலை
எங்களின் நிறுவனப் பண்புகள்
• நிதிப் பராமரிப்பு
• நேர்த்தியான மற்றும் நிபுணத்துவம்
• மதிப்பு மற்றும் நியாயப்பூர்வம்
• நேர்மை மற்றும் நம்பகத்தன்மை
• தொடர்பு மற்றும் குழுப் பணி |