கோலாலம்பூர், 12 மே 2009: தேசிய வைப்புத்தொகை காப்புறுதியாளரான மலேசிய வைப்புத்தொகை காப்புறுதிக் கழகம் (PIDM), இந்த ஆண்டுக்கான தனது புதிய விளம்பரங்களை வெளியிடுவதற்கான தனது புதிய பொது விழிப்புணர்ச்சி பிரசாரத்தை இன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டு துவக்கத்தில் PIDM-மின் அகப்பக்கம் (www.pidm.gov.my) சீரமைக்கப்பட்டதோடு புதிய தகவல் துண்டறிக்கைகளை வெளியிட்டிருக்கும் வேளையில், இன்றைய வெளியீடானது வைப்புத்தொகை காப்புறுதி மீதான பொதுமக்களின் விழிப்புணர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் PIDM-மின் தொடர்ச்சியான முன்முயற்சிகளின் அங்கங்களில் மிகப் பெரியதாகும்.
"உலகம் முழுமையிலும் தனது உறுப்பு வைப்புத்தொகை காப்புறுதியாளர்களினால், பொது விழிப்புணர்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வைப்புத்தொகை காப்புறுதியாளர்களின் அனைத்துலக சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முன்முயற்சியான அனைத்துலக வைப்புத்தொகை காப்புறுதி வாரத்தை (11-15 மே) முன்னிட்டு இன்று எங்களின் புதிய விளம்பரத்தை வெளியிடுவதென்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.," என்று PIDM-மின் தொடர்பு மற்றும் பொதுவிவகாரப் பிரிவு தலைமை நிர்வாகி சி. லோகநாதன் கூறுகிறார்.
"அனைத்து வைப்புத்தொகையாளர்களின் நலனுக்காக வைப்புத்தொகை காப்புறுதி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. நம்பிக்கை மற்றும் நிதி முறையின் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதில் எங்களின் பணி மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மீதான பொது விழிப்புணர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்திலான பல்வேறு முன்முயற்சிகளை, ஒருங்கிணைக்கப்பட்ட எங்களின் பல்லாண்டு தொடர்புத் திட்டம் வகுக்கிறது. இதன் தொடர்பில், தங்களுக்கு விருப்பமான மொழிகளில் வைப்புத்தொகை காப்புறுதி பாதுகாப்பின் அனுகூலங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக எங்களின் தொடர்பு முறையில் PIDM ஒரு பல மொழி அணுகுமுறையை மேற்கொண்டிருக்கிறது," என்று பத்திரிகை விளக்கச் செய்தியில் அவர் கூறுகிறார்.
இந்த அணுகுமுறைக்கு ஏதுவாக, PIDM-மின் விளம்பரங்களும் தொடர்பு வசதிகளும் பல்வேறு மொழிகளில் கிடைக்கின்றன. PIDM-மின் அகப்பக்கம் தேசிய மொழி, ஆங்கிலம், சீனம் மற்றும் தமிழில் கிடைக்கும் வேளையில், "Your Deposits Are Protected" என்ற தலைப்பிலான துண்டறிக்கைகள் இந்த நான்கு மொழிகளிலும் கிடைப்பதோடு சரவா மற்றும் சபாவில் உள்ள வைப்புத்தொகையாளர்களுக்காக இபான் மற்றும் கடாசான் ஆகிய மேலும் இரண்டு மொழிகளிலும் கிடைக்கின்றன.
"பொதுமக்களுக்கு வைப்புத்தொகை காப்புறுதி பாதுகாப்பு குறித்த தகவலைத் தெரிவிப்பதில் தகவல் சாதனங்களைப் பயன்படுத்துவது ஓர் ஆக்கப்பூர்வமான வழியாக இருப்பதால், PIDM பல்வேறு தகவல் சாதனங்களில் (பத்திரிகை, ஒளிபரப்பு மற்றும் மின்னியல் சாதனம்) விளம்பரங்களைச் செய்கிறது." என்று லோகநாதன் குறிப்பிடுகிறார்.
“எங்கள் நடவடிக்கையின் முதலாவது ஆண்டில் எங்களின் அகப்பக்கம் தொடங்கப்பட்டு துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதேவேளையில், மலேசியாவில் புதியக் கொள்கை தொடர்பிலான வைப்புத்தொகை காப்புறுதி முறையின் திட்டங்களை மலேசியர்களுக்கு அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. நான்கு முக்கிய மொழிகளில் ஓர் அகப்பக்கத்தை பராமரிப்பது மற்றும் ஆறு மொழிகளில் துண்டறிக்கைகளை வெளியிடும் புதிய ஏஜென்சிகளில் PIDM-முன் ஒன்றாகும். புதிய துண்டறிக்கை மற்றும் அகப்பக்கத் தொடக்கத்துடனான பல மொழி அணுகுமுறையை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுகிறோம்,” என்று லோகநாதன் கூறுகிறார்.
வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் நிதி முறையின் நிலைத்தன்மையில் பொதுமக்களின் நம்பிக்கையை ஊக்குவிப்பதில் PIDM ஆற்றிவரும் பணி ஆகியவை குறித்து தாங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தையும் கண்டறிய பொதுமக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள ஓரிட மையம்தான் இந்த PIDM-மின் அகப்பக்கமாகும். பொதுமக்கள் இந்த அகப்பக்கத்தில் இருந்து PIDM-மின் விளம்பரங்கள் உட்பட துண்டறிக்கைகளையும் செய்திகளையும் மற்றும் நிறுவனத் தீட்டதகளையும் ஆண்டு அறிக்கைகளையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். சிறப்பாக ஆட்சிப் புரியப்படுவது மற்றும் நிர்வகிக்கப்படுவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள PIDM-மின் உள் நிர்வாகத் தொகுப்புக்கள் மற்றும் இணக்கமுடையத் தகவல்களைக் கொண்டிருக்கும் “PIDM-மின் நிர்வாகம்” என்ற புதியப் பிரிவை PIDM அறிமுகப்படுத்தி இருக்கிறது.
“செய்திகளை நேரடியாக, சுலபமாக மற்றும் தெளிவான முறையில் வழங்குவதற்காகவும் PIDM-மின் முத்திரையை வலிமைப்படுத்துவதற்காகவும் மற்றும் அதன் பயனீட்டாளர்களின் நட்புறவை அதிகரிப்பதற்காகவும் அகப்பக்கத்தின் தோற்றத்தையும் உள்ளடக்கத்தையும் நாங்கள் மறுவடிவுருவம் செய்திருக்கின்றோம். அதேபோல், இந்த துண்டறிக்கைகள் வைப்புத்தொகை காப்புறுதியின் முக்கியத் திட்டங்களையும் வைப்புத்தொகையாளர்களுக்கு அவை எவ்வாறு பயனளிக்கின்றன என்பதையும் விவரிக்கின்றன.” என்று லோகநாதன் குறிப்பிடுகிறார்.
2008-ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்ட அரசாங்க வைப்புத்தொகை உத்ரவாதத்தை PIDM-மின் புதிய விளம்பரங்கள், சீரமைக்கப்பட்ட அகப்பக்கம் மற்றும் புதிய துண்டறிக்கைகள் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த உத்ரவாதத்தின் கீழ், பேங்க் நெகாரா மலேசியாவினால் கட்டுப்படுத்தப்படும் வர்த்தகம், இஸ்லாமிய, முதலூட்டு மற்றும் அனைத்துலக இஸ்லாமிய வங்கிகள் மற்றும் வைப்புத்தொகைகளை ஏற்கும் மேம்பாட்டு நிதிக் கழகங்களில் ரிங்கிட் மற்றும் வெளிநாட்டு நாணயங்களில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து வைப்புத்தொகைகளும் 31 டிசம்பர் 2010 வரையில் PIDM மூலம் அரசாங்கத்தினால் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன.
புதிய தகவல் துண்டறிக்கைகள் அனைத்து உறுப்பு வங்கிகள் மற்றும் உத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் கழகங்களிலும் கிடைக்கும். தங்கள் வங்கிகளின் கிளைகளில் இந்தத் தகவல் துண்டறிக்கைகளைக் கேட்டுப் பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதோடு PIDM மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி குறித்த பரந்த தகவலைப் பெறுவதற்காக சீரமைக்கப்பட்டுள்ள PIDM-மின் அகப்பக்கமான www.pidm.gov.my-யில் வலம் வரலாம். தவிர்த்து, கட்டணமில்லாத 1-800-88-1266 என்ற எண்ணில் PIDM-மிற்கு அழைக்கலாம் அல்லது info@pidm.gov.my-க்கு மின்னஞ்சல் செய்யலாம்.
இந்த பத்திரிகைச் செய்தி குறித்த மேல்விவரங்களுக்கு, இவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்:
சி. லோகநாதன், தலைமை நிர்வாகி, தொடர்பு மற்றும் பொது விவகாரப் பிரிவு
(தொலைபேசி எண்: 03-2173 7455, (மின்னஞ்சல்: loga@pidm.gov.my)
சரினா அரிப்பின், நிர்வாகி, தொடர்பு மற்றும் பொது விவகாரப் பிரிவு
(தொலைபேசி எண்: 03-2173 7457, மின்னஞ்சல்: sarina@pidm.gov.my)
PIDM குறித்த தகவல்
இயல்பாகவே - பேங்க் நெகாரா மலேசியாவினால் கட்டுப்படுத்தப்படும் மலேசிய வர்த்தக வங்கிகள், இஸ்லாமிய வங்கிகள், முதலீட்டு வங்கிகள், அனைத்துலக இஸ்லாமிய வங்கிகள் மற்றும் வைப்புத்தொகைகளைப் பெறும் மேம்பாட்டு நிதிக் கழகங்களில் ரிங்கிட் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து வைப்புத்தொகைகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் மலேசியாவின் அரசாங்க சார்புடைய வைப்புத்தொகை காப்புறுதி முறையை PIDM நிர்வகிக்கிறது.
மேல்விவரங்களுக்கு:
* 1-800-88-1266 என்ற எண்ணுக்கு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் (பொதுவிடுமுறை நாட்களைத் தவிர்த்து) காலை 8.30-தில் இருந்து மாலை 5 மணிக்கிடையில் அழைக்கலாம்.
* மின்னஞ்சல்: info@pidm.gov.my
* வலம் வர: www.pidm.gov.my
|