பத்திரிகை அறிக்கைகள்
பட்டியல் > செய்திகளில் PIDM > பத்திரிகை அறிக்கைகள்
 
பத்திரிகைத் தேடல்
இதற்காக தேடுதல்:
 
இருந்து: -க்கு
   
இவரால் முன்பதிவு செய்யப்பட்டது:

பத்திரிகை அறிக்கை
 
PIDM தனது 2008 ஆண்டறிக்கையை வெளியிடுகிறது
21-05-2009

கோலாலம்பூர், 21 மே 2009: தேசிய வைப்புத்தொகை காப்புறுதியாளர் எனும் முறையில் மலேசிய வைப்புத்தொகை காப்புறுதிக் கழகம் (PIDM) தனது அதிகாரத்தை நிறைவேற்றுவதில் அடைந்திருக்கும் குறிப்பிட்ட சாதனைகளை விளக்கும் தனது 2008 ஆண்டறிக்கையை இன்று வெளியிடுகிறது.

"2005-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது முதல், நிதி நிலைத் தன்மைக்கு பங்களிக்கும் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி பாதுகாப்பை வழங்கும் தனது அதிகாரத்தை நிறைவேற்ற எங்களுக்கு வழிவகுப்பதற்கு அவசியமான அஸ்திவாரங்களை உருவாக்குவது மீது நாங்கள் கவனம் செலுத்தி இருக்கிறோம்," என்று PIDM-மின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜீன் பியர் சபோரின் தெரிவித்தார்.

"2008-ஆம் ஆண்டில், தனது பரந்த தலையிடுதல் மற்றும் தோல்வித் தீர்வு கட்டமைப்பின் அமலாக்கம் மற்றும் பணம் செலுத்தும் ஒரு முறையின் உருவாக்கம் உட்பட தனது செயல்நடவடிக்கைத் தயார்நிலையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை PIDM மேற்கொண்டிருக்கிறது," என்று ஆண்டறிக்கை வெளியீடு முன்னிட்ட PIDM-மின் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது அவர் தெரிவித்தார். ஆண்டறிக்கையின் பிரதிகள் பஹாசா மலேசியா, ஆங்கிலம், சீனம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் www.pidm.gov.my என்ற PIDM-மின் அகப்பக்கத்தில் கிடைக்கும்.

இந்த ஆண்டில் அடையப்பட்ட இதர சாதனைகளில், தனது இடர் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு முறையின் அமலாக்கம், உறுப்புக் கழகங்களுக்கான 2008 உறுப்பியத்துவ விதிமுறைகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் வெளியீடு மற்றும் மாறுபட்ட கட்டண முறையின் அமலாக்கத்துடன் சிறந்த இடர் நிர்வாக முறையைக் கொண்டிருக்க வங்கிகளுக்கு ஊக்குவிப்புக்களை வழங்கியதும் அடங்கும். நிர்வாகத்தில் சிறந்த செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவதற்கான குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்முயற்சிகளையும் PIDM மேற்கொண்டது.

"சிறப்பாக ஆட்சிப் புரிகின்றோம் மற்றும் சிறப்பாக நிர்வகிக்கின்றோம் என்று அங்கீகரிக்கப்படுவதை நோக்கி PIDM பயணம் செய்கிறது. இதன் பயனாக, எங்களின் 2007 ஆண்டறிக்கையின் தரத்திற்காக தேசிய நிறுவன ஆண்டறிக்கை விருது அமைப்பினால் (NACRA) "Certificate of Merit" விருது வழங்கப்பட்டு நாங்கள் கௌரவிக்கப்பட்டுள்ளோம். தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்திடம் இருந்து ஓர் உயர் தர மதிப்பீட்டு விருதையும் நாங்கள் பெற்றிருக்கின்றோம்," என்று சபோரின் தெரிவித்தார்.

"அமெரிக்காவின் மத்திய வைப்புத்தொகை காப்புறுதிக் கழகத்துடன் சேர்ந்து அனைத்துலக வைப்புத்தொகை காப்புறுதியாளர்கள் சங்கத்தினால் ("IADI") ஆண்டின் வைப்புத்தொகை காப்புறுதியாளர் விருதிற்கு நாங்கள் முன்மொழியப்பட்டதன் மூலம் எங்களின் சாதனைகள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய வைப்புத்தொகை காப்புறுதித் துறையில், 2008-ஆம் ஆண்டில் அனைத்துலக இஸ்லாமிய வைப்புத்தொகை காப்புறுதி கருத்தரங்கு ஒன்றை ஏற்று நடத்தியது உட்பட IADI-யின் கீழ் இஸ்லாமிய வைப்புத்தொகை காப்புறுதி குழுமம் (IDIG) அமைக்கப்படும் கூட்டத்திற்கு PIDM தலைமை ஏற்றது," என்று சபோரின் குறிப்பிட்டார்.

PIDM-மின் திட்டங்கள் முன்னோக்கிச் செல்லும் வகையில், அதன் நிறுவனத் திட்டம் 2009-2011 கழகத்தின் வியூக இலக்கு, நோக்கங்கள், திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை வகுக்கிறது. PIDM மதிப்பீடு செய்வதன் கீழ் கழகத்தின் முக்கிய செயல்பாட்டுக் குறியீடுகளை நிறுவனத் திட்டம் அடையாளம் காணுகிறது.

2009-ஆம் ஆண்டிற்கு, PIDM தனது இடர் மதிப்பீடு, கண்காணிப்பு, தலையிடுதல் மற்றும் தோல்வித் தீர்வைக் கையாள தனது ஆற்றலை மேம்படுத்துவது, நிதி முறையில் பொதுமக்களின் விழிப்புணர்ச்சிக்கு ஊக்கமளிக்க தொடர்பு முயற்சிகளை விரிவுப்படுத்துவது மற்றும் ஒரு நிலையான மற்றும் உயர் செயல்பாடுடனான அமைப்பை உறுதிப்படுத்த தனது மனித மூலதனத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை விரைவுப்படுத்துவது மீது கவனம் செலுத்தும்.

2008-ஆம் ஆண்டில், PIDM RM98.5 மில்லியன் மொத்த வருமானத்தைப் பதிவு செய்தது. இதில் கட்டணம் மூலம் வசூலிக்கப்பட்ட RM90.0 மில்லியனும் முதலீட்டு வருமானம் மூலம் கிடைத்த RM8.5 மில்லியனும் அடங்கும். PIDM-மின் RM64.0 மில்லியனின் ஒரு நிகர வருமானத்தில் RM34.5 மில்லியன் நடவடிக்கைச் செலவினமாகப் பதிவானது. 2008-ஆம் ஆண்டு இறுதி வரையில் PIDM-மின் வழக்கமான மற்றும் இஸ்லாமிய வைப்புத்தொகை காப்புறுதி நிதிகள் முறையே RM243.0 மில்லியனாகவும் RM32.3 மில்லியனாகவும் இருந்தன.

நிதி முறையில் நம்பிக்கையை நிலைநாட்ட வட்டார நாடுகளின் முன்முயற்சிகளுக்கு ஏற்ப 16 அக்டோபர் 2008-டில் அரசாங்க வைப்புத்தொகை உத்ரவாத அறிவிப்புடன் PIDM-மின் பணியும் விரிவுப்படுத்தப்பட்டது

இந்த உத்ரவாதத்தின் கீழ், பேங்க் நெகாரா மலேசியாவினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள 22 வர்த்தக வங்கிகள், 17 இஸ்லாமிய வங்கிகள், 15 முதலீட்டு வங்கிகள், மூன்று அனைத்துலக இஸ்லாமிய வங்கிகள் (உள்ளூர் மற்றும் உள்ளூரில் ஒருங்கிணைக்கப்பட்ட வெளிநாட்டு வங்கிக் கழகங்கள் உட்பட) மற்றும் வைப்புத்தொகைகளைப் பெறும் மேம்பாட்டு நிதிக் கழகங்களில் ரிங்கிட் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து வைப்புத்தொகைகளுக்கும் 31 டிசம்பர் 2010 வரையில் PIDM மூலம் இந்த உத்ரவாதத்தினால் முழு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

"நிதி முறையில் வைப்புத்தொகை காப்புறுதி பாதுகாப்பின் சரியான பொது விழிப்புணர்ச்சி மகத்தான நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதால், பொது விழிப்புணர்ச்சியும் போதனையும் தொடர்ந்து PIDM-மின் ஒரு முக்கியமான கவனமாக இருந்து வரும். இந்த ஆண்டுக் காலக் கட்டதில், எங்களின் பல்லாண்டு கால ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்புத் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து அமல்படுத்தி இருக்கிறோம்.

"பொது விழிப்புணர்ச்சி மற்றும் போதனை அம்சங்களில், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஒருமுகப்பட்டிருக்கிறோம். இந்த ஆண்டுக் காலக் கட்டத்தில், எங்களின் பல்லாண்டு கால ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்புத் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து அமல்படுத்தி இருக்கிறோம். வைப்புத்தொகை காப்புறுதி மீதான பயனீட்டாளர்ளின் விழிப்பின் அளவு 2007-ஆம் ஆண்டில் 15%-டிலிருந்து 27%-டிற்கு கணிசமான அளவில் அதிகரித்துள்ள வேளையில் PIDM குறித்த விழிப்புணர்ச்சி 2007-ஆம் ஆண்டில் 12%-டிலிருந்து 32%-டிற்கு அதிகரித்திருக்கிறது." என்று சபோரின் தெரிவித்தார்.

கடந்த வார துவக்கத்தில், அனைத்துலக வைப்புத்தொகை காப்புறுதி வாரத்தை முன்னிட்டு 2009-ஆம் ஆண்டுக்கான தனது புதிய விளம்பரம், அகப்பக்க சீரமைப்பு மற்றும் புதிய பொதுத் தகவல் துண்டறிக்கைகளை வெளியிடத் தொடங்கியபோது, PIDM தனது ஆகக் கடைசியான பொது விழிப்புணர்ச்சி பிரசாரத்தையும் தொடங்கியது. இந்த புதிய தகவல் துண்டறிக்கைகள் அனைத்து உறுப்பு வங்கிகளிலும் உத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் கழகங்களிலும் கிடைக்கும்.
 


இந்த பத்திரிகைச் செய்தி குறித்த மேல்விவரங்களுக்கு, இவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்:

சி. லோகநாதன், தலைமை நிர்வாகி, தொடர்பு மற்றும் பொது விவகாரப் பிரிவு
(தொலைபேசி எண்: 03-2173 7455, (மின்னஞ்சல்: loga@pidm.gov.my)

சரினா அரிப்பின், நிர்வாகி, தொடர்பு மற்றும் பொது விவகாரப் பிரிவு
(தொலைபேசி எண்: 03-2173 7457, மின்னஞ்சல்: sarina@pidm.gov.my)


PIDM குறித்த தகவல்

இயல்பாகவே - பேங்க் நெகாரா மலேசியாவினால் கட்டுப்படுத்தப்படும் மலேசிய வர்த்தக வங்கிகள், இஸ்லாமிய வங்கிகள், முதலீட்டு வங்கிகள், அனைத்துலக இஸ்லாமிய வங்கிகள் மற்றும் வைப்புத்தொகைகளைப் பெறும் மேம்பாட்டு நிதிக் கழகங்களில் ரிங்கிட் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து வைப்புத்தொகைகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் மலேசியாவின் அரசாங்க சார்புடைய வைப்புத்தொகை காப்புறுதி முறையை PIDM நிர்வகிக்கிறது.

மேல்விவரங்களுக்கு:
* 1-800-88-1266 என்ற எண்ணுக்கு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் (பொதுவிடுமுறை நாட்களைத் தவிர்த்து) காலை 8.30-தில் இருந்து மாலை 5 மணிக்கிடையில் அழைக்கலாம்.
* மின்னஞ்சல்: info@pidm.gov.my
* வலம் வர: www.pidm.gov.my
 

 
   
 
   Back to Search Results | Back to Press Releases
     



Name :  
Email :&nsbp; 
Message :  
நண்பருக்கு அனுப்புங்கள்
உங்களின் தகவல் (இங்கே கிளிக் செய்யுங்கள்):